.

கனிம பதனிடுதல்/குரோம் பதனிடுதல்-Thinachuvadi

கனிம பதனிடுதல் (Mineral tanning) 

Cr, Al, Fe, Zr போன்றவற்றின் கனிமங்கள், ஆல்டிஹைடுகள் மற்றும் எண்ணெய்கள் கொண்டு பதனிடுதலே கனிம பதனிடுதல் எனப்படும்.



(அ) குரோம் பதனிடுதல் (chrome tanning)

கார குரோமியம் உப்பு கொண்டு தோல்களை பதனிடுதலுக்கு உட்படுத்துவதே குரோம் பதனிடுதல் எனப்படும்.

 குரோம் டானிங் திரவம் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்கள்:  

எண்  பொருள்கள்  அளவு
1.  சோடியம் டை குரோமேட்  10 kg
2.  சல்புயூரிக் அமிலம் (98%)
 10 kg
3.  குளுக்கோஸ்   6 kg
4.  நீர்   4காலன்கள் 

குரோம்-டானிங் திரவம் தயாரித்தல் :

(i) புதிதாக வீழ்படிவான குரோமிக் ஹைட்ராக்ஸைடை HSO4-இல் கரைத்து, பின்னர் தேவையான அளவு Na2SO4 சேர்த்தல் அல்லது குரோம் படிகார கரைசலுக்கு   காரத்தைச் சேர்த்தல். 

(ii) Na2Cr2O7 இன் அமிலக்கரைசலை குளுகோஸ், சர்க்கரைக் கழிவு, கிளிசரின், ஸ்டார்ச் மற்றும் மரத்தூள் கொண்டு ஒடுக்குதல். Na, SO2 அல்லது Na, S, O பயன்படுத்தியும் குரோம்-டானிங் திரவத்தைத் தயாரிக்கலாம். 

டைகுரோமேட்டை ஒடுக்க SO2 வாயுவையும் பயன்படுத்தலாம்.

Previous Post Next Post

نموذج الاتصال